புதன், 18 பிப்ரவரி, 2009

குட்டி நிலாக்கள்(ஹைக்கூ)


வானவில் உதிர்த்த 
வண்ண வண்ண பூக்கள் 
வண்ணத்துப் பூச்சிகள்

               *******

தற்கொலைக்கு முயன்றால் 
கிணற்றுக்குள் எனக்கு முன் 
நீயுமா நிலாவே..?

               ********

வியர்த்தது விட்டில் பூச்சி
மரண பயமல்ல..,
மானுட பயம்.

              *********

தலை கனக்க 
பூ வைத்திருக்கிறாள் விதவை ,
பூக்கூடையில்.

              *********

கடவுள் கையில் 
ஆயுதம்,
பயம் யாரிடம்.?

              ********

வயல்காட்டிலும் நாகரீகம் 
பேண்ட் சட்டையுடன் 
சோளக்கொல்லை பொம்மை.

               ********

வெயிலில் ஆடு மேய்த்து
புழுங்கிய சிறுவனுக்கு ,
குடைபிடித்தது பனை.

               *********

மண்ணில் வீழ்ந்தால் 
மாயும் உருவென்று,
தும்பை மேல் தூங்கும் பனி.

                **********

விண்ணுக்கும் ம்ண்ணுக்கும் 
காதல் தூது,
மழை.

                 **********

தொலைந்து போனேன் 
தேடி வந்தது,
வானத்து நிலா.

                 *********


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Recent Comments