
"மாலை வரும்போது
சாக்லெட் பலூன் கேக்
எல்லாம் வாங்கி வாப்பா
நான் வாசலில் காத்திருப்பேன்"
அதிகாரியின் மகள்.

"சாயங்காலம் வரும்போது
எனக்கு ஒன்னும் வாணாம்
நீ மட்டும்
பத்திரமா
திரும்பி வாப்பா
நான் கடலோரத்திலேயே
காத்திருப்பேன்"
மீனவனின் மகள்.
மல்லை.தமிழச்சியின்..கவிதைகள்..கதைகள்..!
1 கருத்து:
உலகத்திலேயே தன்னை வெளியே அழித்துச் செல்லும் வண்டிக்காரன்தான் உயர்ந்தவன் என்பது நரேந்திரனுக்கு நினைப்பாக இருந்தது இளமையில்! இராமகிருஷ்ணர் அறிமுகத்திற்குப்பின் எல்லாம் மாறீப்போனது.! மூச்சுக்காற்றின் அருமை தெரியும் பொழுது சாக்லெட்,பலூன்,கேக் மறைந்து அப்பா புரியும்.
கருத்துரையிடுக