
சுழலும் உலகில்
சுதந்திரம் பறிபோக
சோகக் கொடிகளை
கைகளில் ஏந்தி
சதவிகிதம் வேண்டி
சாலைதோரும்
உலா வரும்
விரக்திப் பூக்கள்.
உறங்கிக்கொண்டிருக்கும்
உன் ஊமை உள்ளத்தை
உசுப்பிவிடு.
ஆக்க உணர்வுகளுக்கு
நம்பிக்கை நீரூற்றி
இலட்சிய வாளுடன்
களம் இறங்கு.
நினைவுகளும் நிஜங்களும்
நித்திரை கொள்ளாதவரை
நீதியும் நேர்மையும்
விழித்திருக்குமென
எழுச்சி தீ மூட்டு.
எதிர்வரும் இடர்களளை
எதிர்த்து
போடு நீ
எதிர் நீச்சல்.
அடிமை தளையை
அறுத்தெறிந்து
புதிதாய் படை
ஓர் அத்தியாயம்.
உரிமை போருக்கு
உரைகல் நீயாக
தீப்பிழம்பாய்
திரண்டெழு பெண்ணே
தீப்பிழம்பாய் திரண்டெழு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக