புதன், 18 பிப்ரவரி, 2009

மனசு

சாய்ந்தோடிய பேருந்தில் 
முதுகும் மூச்சும் 
உரச பயணித்தனர் மக்கள்,
நோயுற்ற குழந்ததையை 
நோகாமல் சுமந்த 
தாய் ஒருத்தி 
தன்னிலை கூறி 
அமர கேட்டாள் இடம்..,
சட்டென 
எழுந்த மூதாட்டிக்கு 
உடலில் ஒரு கால் 
கையில் மறுகால் 
ஊன்றுகோலாய்..! கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Recent Comments