
தன்னை பெற்றதால்
தாய் வேண்டும்..!
உடன் பிறந்ததால்
தமக்கை வேண்டும்..!
மகிழ்ந்து உறவாட
மனைவி வேண்டும்..!
வேண்டுதல் நிறைவேற
வேண்டும் அம்மனும்..!
தாய் முதல் சாமிவரை
பெண்ணாய் வேண்டும்..,
பெற்ற குழந்தை மட்டும்
பெண்ணாய்போனால்
முதல் பால்
கள்ளிப்பால்..!
மல்லை.தமிழச்சியின்..கவிதைகள்..கதைகள்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக