"விழியில் நனையும் உயிர்கள்"-கவிதை தொகுப்பு பற்றி..
இத்தொகுப்பு என் இரண்டாம் முயற்சி. ஆசிரியப்பணியை நேசித்து மேற்கொண்டதாலோ என்னவோ..கும்பகோணத்தில் நிகழ்ந்த விபரீத தீ விபத்து என் மனதை மிகவும் சுட்டது. புண்ணாகிப்போன என் எழுதுகோலிலிருந்து.."விழியில் நனையும் உயிர்கள்"-என்ற தலைப்பில் மரணித்த அந்த பிள்ளைகளின் அஞ்சலிக்காக ஒரு கவிதையை எழுதியபோது..என் சக ஆசிரியர்களும்..இலக்கிய தோழர்களும்..அதன் சோகத்தை உலகறிய செய்ய விரும்பி..அதுவும் குறிப்பாக.. என் இலக்கிய ஆசான்..ஓவியக்கவி.நா.வீரமணி.ஆசிரியர் அவர்கள்..அக்கவிதையை..அச்செடுத்து..பல்லாயிரம் பிரதிகளை..மக்களிடம் கொண்டு சேர்த்த நிகழ்வு..வாழ்வில் மறக்க முடியாதது.
பிறகு.. அக்கவிதையையே..தலைப்பு கவிதையாகக்கொண்டு..என் இரண்டாம் தொகுப்பு உருவானது. இத்தொகுபில் பெரும்பாலும்..பள்ளிசார் குழந்தைகளின் மன உணர்வுகளை பிரதிபலித்தேன்.
இன்னும் பெண்ணியம் சார்ந்த படைப்புகளும்..,சமுதாயத்தின் அவலங்களை சாடும் படைப்புகளாலும் நிரப்பினேன். விரைவில் இத்தொகுபின் கவியதைகளும் உங்கள் பார்வைக்கு வரவிருக்கிறது.
Azhagi - a Never-Before-Seen Tamil Transliteration Software
Click here to know how ........
ONLY Tamil Transliterator which
is 100% Phonetics-Compliant.
Click here to know how ..........
FREE Download of Azhagi - World's Easiest Tamil Transliterator - here
நிறைவான ஆசிரியப்பணி.அன்பான குடும்பம்.இலக்கியத்தில் தாளாத ஆர்வம்.
"சிற்பியின் கவிதை மாமல்லபுரம்"- முதல் கவிதை தொகுப்பு.
"விழியில் நனையும் உயிர்கள்"-இரண்டாம் கவிதை தொகுப்பு.
சிறுகதை தொகுப்பு அச்சில்.குறுநாவல்..நாவல்..முயற்சியும்..விரைவில்.
பெண்மையை போற்றும்..வாழ்வை நோக்கி பயணப்படுகிறது..என் படைப்புகள்.
என் வீட்டின் சாளரத்தின்..வழியே..நான்..வாழ்வை தரிசித்த...இயல்பிலும்..
நடைமுறை நிகழ்வுகள்..வாரித் தந்த அனுபவங்களின்..வலிகளும்..என் படைப்பின் முகவரி.
2 கருத்துகள்:
Feel good......
அந்த நிகழ்வு அவ்வளவு லேசாக மறக்கக் கூடியதா?
இப்போ கூட நினைத்தாலும் விழியும் உயிரும் நனையுமே...
அன்புடன் அருணா
கருத்துரையிடுக