புதன், 29 அக்டோபர், 2008

"சிற்பியின் கவிதை மாமல்லபுரம்"- கவிதை தொகுப்பு பற்றி..




ஆசிரிய பணிக்கான பயிற்சி முடிந்து நான் பணி நியமனம் பெற்றதும்..உருப்பெற்றதே..இக்கவிதை தொகுப்புக்கான முயற்சி.
என்னுடைய தந்தையார்..மாமல்லபுரத்தில்..உளியோடும்..,கற்களோடும்..வாழ்ந்த கலைஞர்..என்பதாலும்..என் சிறுபிள்ளை பிராயத்திலிருந்தே
பல்லவ்ர்களின் சிற்ப நகரமான மல்லையில் வாழ்ந்தவள் என்பதாலும்..அவற்றின் மீதான ஈர்ப்பு உள் மனதில் இருந்துகொண்டே வந்தது.
அச்சிற்பங்களின் பெருமையை வித்தியாசமான முறையிலும்..,சுற்றுலா பயணிகளுக்கும்..பயன்படும் வகையிலும்..பதிவு செய்ய வேண்டும்
என்கிற பேரவா என்னை உந்திக்கொண்டே இருந்தபோது..உதித்த முடிவுதான்..பல்லவ சிற்பங்களை..கவிதையாக்கும் முயற்சி.

இதற்காக நிறைய பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஒவ்வொரு சிற்பங்களுக்கும் பின்புலனாய் இருக்கும் செய்திகளை சேகரிக்க துவங்கினேன்.ஐந்து ரதம் துவங்கி..,அர்ச்சுனன் தபசு..,மற்றும் குடவரை கோயில்கள்வரை..ஒவ்வொன்றின் விவரங்களையும் சேகரித்த பின்னர்..
அச்செய்திகளை..கவிதையாக்கும்..பட்டறைப் பணியை துவங்கினேன்.

சிற்பங்கள் பற்றிய சின்ன சின்ன செய்திகளைக்கூட விடவில்லை.
முதலில் இப்படைப்புகள் குறித்து என் இலக்கிய நண்பர்களிடமே நிறைய கேள்விகள் இருந்தன.
என் இம்மாதிரியான படைப்புகள்..புது கவிதை எனும்..கோட்பாட்டிற்குள்ளோ..,மரபு கவிதை எனும் இலக்கண பிடிக்குள்ளோ..வரவில்லை..என விமரிசிக்க தலைப்பட்டார்கள்.

நான் எதை பற்றியும் கவலை கொள்ளவில்லை.
நான் வாழ்ந்து..கண்டு..களித்து..,ரசித்து..,உணர்ந்த மெய்மைகளை..எனக்கு பிடித்த வடிவத்தில் உரக்கசொல்வதாகவே..மகிழ்ந்தேன்.

விரைவில் அந்த கவிதைகள் அனைத்தும் உங்கள் பார்வைக்கு விருந்தாக வரவிருக்கிறது..படித்து உங்களின் மேலான கருத்துக்களை..பதிவு செய்யுங்கள்.

1 கருத்து:

கருத்துரையிடுக

Recent Comments