




இத்தொகுப்பு என் இரண்டாம் முயற்சி.
ஆசிரியப்பணியை நேசித்து மேற்கொண்டதாலோ என்னவோ..கும்பகோணத்தில் நிகழ்ந்த விபரீத தீ விபத்து என் மனதை மிகவும் சுட்டது.
புண்ணாகிப்போன என் எழுதுகோலிலிருந்து.."விழியில் நனையும் உயிர்கள்"-என்ற தலைப்பில் மரணித்த அந்த பிள்ளைகளின் அஞ்சலிக்காக ஒரு கவிதையை எழுதியபோது..என் சக ஆசிரியர்களும்..இலக்கிய தோழர்களும்..அதன் சோகத்தை உலகறிய செய்ய விரும்பி..அதுவும் குறிப்பாக..
என் இலக்கிய ஆசான்..ஓவியக்கவி.நா.வீரமணி.ஆசிரியர் அவர்கள்..அக்கவிதையை..அச்செடுத்து..பல்லாயிரம் பிரதிகளை..மக்களிடம் கொண்டு சேர்த்த நிகழ்வு..வாழ்வில் மறக்க முடியாதது.
பிறகு..
அக்கவிதையையே..தலைப்பு கவிதையாகக்கொண்டு..என் இரண்டாம் தொகுப்பு உருவானது.
இத்தொகுபில் பெரும்பாலும்..பள்ளிசார் குழந்தைகளின் மன உணர்வுகளை பிரதிபலித்தேன்.
இன்னும் பெண்ணியம் சார்ந்த படைப்புகளும்..,சமுதாயத்தின் அவலங்களை சாடும் படைப்புகளாலும் நிரப்பினேன்.
விரைவில் இத்தொகுபின் கவியதைகளும் உங்கள் பார்வைக்கு வரவிருக்கிறது.
படித்து..தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.